மேம்பாலத்திற்கு அடியில் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக | சூதாட்ட கிளப் உரிமையாளர் கைது |
மேம்பாலத்திற்கு அடியில் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக | சூதாட்ட கிளப் உரிமையாளர் கைது |
கொடுங்கையூர் ஜிஎம்டி நகரில் ஸ்னூக்கர்,கோஷினோ, ஏரோ, போன்ற விளையாட்டில் ஆயிரக்கணக்கில் பந்தயம் கட்டி விளையாடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின், பேரில் அங்கு சென்ற கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் விளையாட்டிற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்து சூதாட்ட கிளப் நடத்திய வினோத்குமார் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் விளையாட்டு என்ற பெயரில் பொருட்களை வைத்து ஆயிரக்கணக்கில் வசூல் செய்ததும் தெரியவந்தது…
மேலும் இங்கு விளையாட வந்த பலர் தான் அணிந்து இருந்த தங்க நகைகளையும் வைத்து விளையாடியதாக விசாரணையில் தெரியவர அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இல்லாமல் இதுபோன்ற விளையாட்டு என்கின்ற பெயரில் சூதாட்டம் நடத்தி வரும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது…
நிருபர் வே.சரவணன்