தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் | விரைவு நீதிமன்றத்தில் சரண் |
அக்டோபர் 04 2019
சென்னை அயனாவரத்தை சேர்ந்த பால் வியாபாரி சாமிக்கண்ணு (39) என்பவர் தன்னை நான்கு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கூறி அளித்த புகாரின் பேரில் 4 நபர்களை புளியந்தோப்பு போலீசார் தேடியதாகவும் அதில் மூன்று பேரை மட்டும் போலீசார் கைது செய்த நிலையில் நான்காவது நபரான பாம் சரவணன் மட்டும் பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில் பாம் சரவணன் தலைமறைவாக இருந்து வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாம் சரவணனை கைது செய்ய புளியந்தோப்பு போலீசார் தொடர்ந்து அவரது சொந்த ஊரான திருவள்ளுர் மாவட்டம் திருப்பாச்சூரில் முகாமிட்டு தேடி வந்ததால் போலீசார் தன்னை நெருங்கி விட்டதை அறிந்து பாம் சரவணன் (40) நேற்று மதியம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் விரைவு நீதிமன்றத்தில் தானே வந்து சரண் அடைந்ததாகவும் பாம் சரவணன் மீது பத்து கொலை வழக்குகள் உட்பட 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்…
நமது நிருபர்