Fri. Dec 20th, 2024

பாலியல் வழக்கில் வாலிபருக்கு 17 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

அக்டோபர் 03 2019

புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர்… அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமயம் அருகே வைத்து பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த மகிளா நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அவர்கள் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்முறை செய்த இளைஞர் சுரேஷ்குமாருக்கு 17 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையும், ரூபாய் இரண்டாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த சுரேஷ்குமார் ஒரு முறை திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்தும் ஒருமுறை புதுக்கோட்டை மாவட்ட சிறையில் இருந்தும் தப்பிச்சென்று மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்