செல்போன் திருட பயிற்சி அளித்த | 11 பேர் கொண்ட கார்ப்பரேட் கும்பல் கைது |
அக்டோபர் 03 2019
கார்ப்பரேட் நிறுவனம் போன்ற செல்போன் திருடுவதற்கு நிறுவனம் நடத்திய கும்பல் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலையில் சேரும்போது 6 மாத பயிற்சியும் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறையும் அளித்த செல்போன் திருடும் நிறுவனம் நடத்திய திருட்டு கும்பலை யானைக்கவுனி போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பாக சந்தேகப்படும் படியாக ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் சுற்றித் திரிந்த போது போலீசார் பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் அந்த நபரை விசாரணை மட்டும் செய்து வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். அந்த ஆந்திர நபருக்கு பின்னால் இரண்டு காவலர்களை பின்தொடர அனுப்பி வைத்து சோழாவரத்தில் உள்ள ஒரு வீட்டில் தன் கையில் இருக்கும் செல்போனை ஒருவரிடம் ஒப்படைக்கும் போது கையும் களவுமாக போலீசார் பிடித்து. வீட்டை சோதனை செய்ததில் தெலுங்கு செய்தித்தாள் அதிக அளவு வீட்டில் கிடந்துள்ளது. பிடிபட்டவர்களை விசாரணை செய்த போது ஆந்திராவைச் சேர்ந்த கும்பல் வாடகை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் சென்னை முழுவதும் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததும் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் போலீசார் குறிவைத்து கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கார்ப்பரேட் நிறுவனம் போல் செல்போன் திருடுவதற்கு என நிறுவனத்தை நடத்தி செயல்பட்டதும். ஆந்திராவில் இருந்து வந்த வாலிபர்களை செல்போன் திருட்டு தொழிலில் சேர்த்து 6 மாதம் பயிற்சி அளித்து குறிப்பாக கூட்ட நெரிசலில் தெலுங்கு செய்தித்தாள் படித்துக் கொண்டே செல்போன் திருடுதல், கைக்குட்டையை பயன்படுத்தி செல்போனை திருடுதல் என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து நபர்களை திசை திருப்பி செல் போன்களை திருடுவது போன்ற பயிற்சியை இந்தக் கும்பலுக்கு ரவி அளித்துள்ளதாகவும். அதுமட்டுமல்லாது திங்கள் முதல் வெள்ளி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன்களை கும்பலாக பிரிந்து விட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் செல்போன் திருட்டு நபர்களுக்கு விடுமுறை அளித்து மேலும் திருடும் நபர்களுக்கு இத்தனை செல்போன்களை திருட வேண்டும் எனவும் கார்ப்ரேட் நிறுவன டீம் லீடர் போல் டார்கெட் நிர்ணயம் செய்து அதிக செல்போன் திருடும் திருடர்களுக்கு போனசாக மூன்று செல்போன்களை கொடுத்து விடுவதும் வேலை செய்வதற்கு முன்பாகவே சம்பளத்தைக் கொடுத்து திருட சொல்வது இந்த செல்போன் திருட்டு நிறுவனத்தின் கொள்கை என ரவி வாக்குமூலம் அளித்துள்ளார். குறைந்த பட்சம் வாரம் 50 செல்போன்கள் என கடந்த இரண்டு வருடங்களில் 50க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடி இருக்கலாம் என தெரிய வந்துள்ளதால். திருடிய செல்போன்கள் அனைத்தும் கும்பல் தலைவன் ரவி சேகரித்து வைத்து ஆந்திராவில் மாதாமாதம் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து 40 செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மற்ற செல்போன்களை மீட்பதற்காகவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்