Fri. Dec 20th, 2024

10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை | வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது |

அக்டோபர் 02 2019

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அச்சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகுல் (19), என்பதும் மதுரவாயலில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இவர் 16 வயதுள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தெரிய வந்ததையடுத்து கோகுலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…

நிருபர்
வே.சரவணன்