கொடுங்கையூரில் மூதாட்டி ஒருவர் கொலை வழக்கில் ஒருவர் கைது.
அக்டோபர் 01-2019
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4வது பிளாக் 96வது தெருவில் வசிப்பவர் விமலா (68) இவரது கணவர் கோவிந்தன் இறந்து விட்டார். விமலாவுக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். விமலா அந்த வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செப் 15ஆம் தேதி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் வீட்டில் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது தகவலின் பேரில் அங்கு சென்ற கொடுங்கையூர் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் விமலாவின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் விசாரித்ததில் விமலாவின் இரண்டு மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி தனியாக இருப்பதாகவும் விமலா மட்டும் அந்த வீட்டில் தனியாக இருப்பதாகவும் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி அவருக்கு மயக்கம் வரும் என அவரது மகன்கள் தெரிவித்ததால். இயற்கையான மரணமாக இருக்கக்கூடும் என காவல்துறையினர் விட்டுவிட்டனர். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது இதில் விமலாவின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது இதனால் சந்தேகமடைந்த கொடுங்கையூர் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரிக்க உதவி ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்கள் அப்பகுதியில் விசாரித்ததில் விமலாவின் பக்கத்து வீட்டில் இருக்கும் கணேசன் என்பவரின் மகன் சுதாகர் (34) என்பவர் விமலா இறந்த நாள்முதல் அங்கு இல்லை என தெரியவந்தது.
இதனால் சுதாகர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொடுங்கையூரில் எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் மது குடித்துக் கொண்டிருந்த பொழுது அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் விமலாவின் வீட்டிற்கு கடந்த 14ஆம் தேதி இரவு சுதாகர் முழு போதையில் சென்றதாகவும் அப்பொழுது அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது சுதாகர் அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதில் விமலா எழுந்து கூச்சலிட அவரது கழுத்தை பிடித்து இறுக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் விமலா மயக்கமடைந்து விட பயத்தில் சுதாகர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன் பின்பு மறுநாள் போலீசார் வந்து விசாரணை செய்து விட்டு இது இயற்கை மரணம் என கூறிவிட்டனர். என தெரியவந்ததால் அதே பகுதியில் ஜாலியாக சுற்றித் திரிந்தார் என போலீசார் தெரிவித்தனர். சுதாகருக்கு திருமணமாகி அவரது மனைவி பத்தாண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
தற்போது சுதாகர் அவரது அப்பா அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். விமலாவின் மூன்றாவது மகன் பிரவின் குமாரிடம் புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் சுதாகரை கைது செய்து கொலை மற்றும் கற்பழிப்பு முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நிருபர் வே.சரவணன்