பெருந்துறையில் கஞ்சா விற்பனை செய்ததாக இருவர் கைது
பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் நேற்று மாலை உதவி ஆய்வாளர் ரஃபி வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்த 400கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிகண்ணன் மற்றும் ஊத்துக்குளி முரட்டு பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பதும் தெரியவர இருவரையும் கைது செய்த போலீசார் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்…
நிருபர்
சண்முகசுந்தரம்