Mon. Oct 7th, 2024

இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.

செப்டம்பர் 28-2019

சென்னை திருமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக புகார்கள் திருமங்கலம் காவல் நிலையத்தில் குவிந்தன. ஆய்வாளர் ரவி தலைமையில் மாறுவேடத்தில் தனிப்படை போலீசார் சுற்றி வந்தனர். அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி அன்று பாடி குப்பத்தில் ஒரு வாலிபர் கஞ்சா வாங்குவதற்காக வந்த நிலையில் அப்போது சம்பவ இடத்துக்கு வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவருடைய பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் இருந்தது யார் விற்பனை செய்கிறார்கள் என்று விசாரணை செய்ததில் சார் போன் செய்தால் இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் வந்து ஒரு பொட்டலம் கஞ்சா 200 ௹பாய் என்று விற்பனை செய்து விட்டு செல்வார் என்று கூறினார்.

அந்த நபரை வைத்து போன் செய்து 10 கஞ்சா பொட்டலம் வேண்டும் என்று பேசிய போது நெற்குன்றம் வாங்க என்று சொல்லி உள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற உதவி ஆய்வாளர் யுவராஜ் மறைவாக நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பூந்தமல்லி காட்டுப்பாக்கம் ராமதாஸ் நகர் சேர்ந்தவர் ஆனந்த மூர்த்தி (38) என தெரிய வந்தது. இவரிடம் இருந்து 60 கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

மேலும் ஆனந்தமூர்த்தி ஆந்திராவில் இருந்து 100 ரூபாய்க்கு கஞ்சா வாங்கி வந்து 200 ரூபாய்க்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் மேலும் ஆனந்தமூர்த்தி மீது அடிதடி கஞ்சா வழக்கு கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய பல காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்✍