Fri. Dec 20th, 2024

திருமண நிகழ்ச்சியில் காவலர் மகளிடம் | 4 சவரன் நகைகளை திருடியவர் கைது |

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரியும் சசிக்குமார் என்பவர் கடந்த 1ம் தேதி வடபழனியில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது. திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த காவலரின் மகள் கழுத்தில் இருந்த 4 சவரன் நகை மாயமாகி இருப்பது தெரியவர காவலர் சசிக்குமார் வடபழனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், திருமண நிகழ்ச்சியின் வீடியோ பதிவையும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த காவலர் மகள் கழுத்தில் இருந்த நகையை திருடுவது பதிவாகி இருந்தது. வழக்கு பதிவு செய்த வடபழனி உதவி ஆணையர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போது வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தான் செயினை திருடி சென்றது தெரியவர வேலூருக்கு சென்ற தனிப்படை போலீசார் புருஷோத்தமன் கூடுவாஞ்சேரியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து சுற்றி வளைத்து பிடித்தனர். புருஷோத்தமனிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது இதுபோன்ற 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம் நகையைத் திருடுவதை வாடிக்கையாக கொண்டு இருப்பது விசாரணையில் தெரியவர அவரிடம் இருந்த 16 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட புருஷோத்தமன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்