சென்னை திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் | மின்கசிவு காரணமாக தீ விபத்து |
சென்னை திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து |
சென்னை திருமங்கலத்தில் உள்ள விகேர் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை முழுவதும் புகை மண்டலமாக உள்ளதால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளானர். தீ பரவியதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தகவலறிந்து அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து வருகின்றனர். தீவிபத்து குறித்து செய்தி அறிந்து நோயாளிகளின் உறவினர்கள் அங்கு கூடியதால் பரப்பரபான சூழ்நிலை நிலவியது…
நிருபர் வே.சரவணன்