வில்லிவாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது கஞ்சா பறிமுதல் |
வில்லிவாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவர் கைது கஞ்சா பறிமுதல் |
சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக வில்லிவாக்கம் போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து ரோந்து பணியில் உள்ள ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்த முயற்சி செய்யும் போது அவர் தப்பியோட முயற்சி செய்தார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த பொழுது வில்லிவாக்கம் நேரு நகர் பகுதியை சேர்ந்த தனசேகர் (26), என்பதும் கடந்த ஜூன் மாதம் கொலை முயற்சி வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் தான் சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்றும் வெளியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே விற்பனை செய்து வந்ததும் தெரியவர அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…
நிருபர்
வே.சரவணன்