வியாசர்பாடி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் இருவர் கைது |
வியாசர்பாடி ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் இருவர் கைது |
சென்னை வியாசர்பாடி பகுதியில் கடந்த ஞாயிறன்று இரவு ஜெகன் (24) என்ற ஆட்டோ டிரைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த அஜீத் என்கின்ற கருப்பு அஜீத் (24) மற்றும் R.R.நகர் பகுதியை சேர்ந்த அஜ்புல்லா என்கின்ற அஜித் (20) ஆகிய இருவரை MKB.நகர் போலீசார் முல்லைநகர் சுடுகாடு அருகே கைது செய்தனர்…
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாரதி என்ற தங்களது உறவுக்கார பெண்ணை ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கத்தியால் வெட்டி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும் என பாரதியின் உறவினர்களான அஜீத் என்கின்ற கருப்பு அஜீத்தும் அவரது நண்பர் அஜித்தும் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்…
நிருபர்
வே.சரவணன்