இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் | செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஒருவர் கைது |
இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் | செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஒருவர் கைது |
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் இன்று ராஜமுத்து (28) என்பவர் நடந்து செல்லும் போது மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் அவரிடம் இருந்த 650 ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ராஜமுத்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்தில் சந்தேகப்படும் வகையில் ஒரு நபர் சுற்றித்திரிந்து உள்ளார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் வால்டாக்ஸ் சாலை பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (34) என்பது தெரிய வந்தது மேலும் இரவு நேரத்தில் ரயில் நிலையத்தில் உறங்கும் பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை கொள்ளை அடிப்படையும் வாடிக்கையாக கொண்டிருப்பதும் தெரியவந்தது.
பின்னர் ரயில் நிலையங்களில் சார்ஜரில் இருக்கும் செல்போன்களை திருடி செல்வதும் விசாரணையில் தெரியவர அவரிடமிருந்து 6 செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர் மீது 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் பிரேம் குமாரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
நமது நிருபர்