Fri. Dec 20th, 2024

4 கிலோ கஞ்சா பறிமுதல் ஒரு பெண் உட்பட நால்வர் கைது |

4 கிலோ கஞ்சா பறிமுதல் ஒரு பெண் உட்பட நால்வர் கைது |

சென்னை மணலி அருகே பழைய MGR நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நுண்ணறிவு பிரிவு போலீசார் ராஜசேகர் மற்றும் குற்றப்பிரிவு காவலர் கண்ணன் இருவரும் அவ்வழியாகச் சென்ற போது சந்தேகத்துக்கு இடமான வாலிபர் ஒருவரை அழைத்து விசாரித்ததில் அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவர அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் பெயர் லோகேஷ் (23) என்பது தெரியவந்தது இவர் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவரின் கூட்டாளிகள் மணலி பகுதியில் பல்வேறு இடங்களில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறியதால். தனிப்படை போலீசார் இவரது கூட்டாளிகள்…

புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கவிதா (32) வினேஷ்வரன் என்கின்ற விக்கி(29) நவீன் குமார் (19), பெண் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரித்ததில் சுமார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் 4 செல் போன்கள் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்து நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

நிருபர்
வே.சரவணன்