Fri. Dec 20th, 2024

சென்னையில் கஞ்சா விற்பனை படுஜோர் | இன்றும் 2 பெண்கள் கைது |

செப்டம்பர் 18-2019

சென்னை திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் மார்க்கெட் அருகே சந்தேகத்திற்கு இடமாக இரண்டு பெண்களை ரோந்து பணியில் வந்த தனிப்படை போலீசார் இரண்டு பெண்களையும் விசாரித்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை அவ்வழியாக வரும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக மறைந்து நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும் பின்னர் இருவரையும் விசாரணைக்கு எண்ணூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் இருவரும் கார்கில் நகர் பகுதியை சேர்ந்த ஆஷா (50) மற்றும் ஜமுனா (36) என்றும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்ததும் தெரியவர இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து புழல் அடைத்தனர்..

நிருபர்
வே.சரவணன்