கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் | 9 பேரை துரத்தி பிடித்த ரயில்வே போலீசார் |
செப்டம்பர் 18-2019
சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிபேட்டை வழியாக பறக்கும் ரயிலில் கடற்கரை வந்த 20 பேர் கொண்ட இந்த மாணவர்கள் கடற்கரை ரயில் நிலையம் வந்ததும் மோதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பிரிவுகளாக மோதிக் கொண்டதில்
9 மாணவர்களை ரயில்வே போலீசார் பிடித்து கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதில் ஒரு மாணவனிடமிருந்து பட்டா கத்தியும் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தகவல்…
பிடிபட்ட 9 மாணவர்களையும் எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருடத்தில் தொடர் கதையாகும் மாணவர்களின் கத்தி சண்டை கலாசாரத்தில் இது நான்காவது கத்தி சண்டை மோதல் என்பது குறிப்பிடத்தக்கது…
நமது நிருபர்