Fri. Dec 20th, 2024

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை | கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி |

செப்டம்பர் 16-2019

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில்… தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த பெரிய தம்பி என்பவர் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த பெரியதம்பி என்பவர்…. தன்னுடைய உறவினர் அவருடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகிறார் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளித்துள்ளார். அந்த மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது ஆக்கிரமிப்பு செய்த உறவினர் அவரை மிரட்டி வருவதாகவும்  நிலத்தை வாங்கி தரவேண்டும் எனவும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்… இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் குடும்பத்துடன் மண்ணெண்ணையுடன் வந்து… கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடம்பில்  மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்து மண்ணெண்ணையும், அவர் குடும்பத்தையும் மீட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். கொஞ்சம் தாமதித்தாலும் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை  உருவாகியிருக்கும். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனைகளை  செய்தே பொதுமக்களை உள்ளே  விடும் நிலையில்  மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெரிய தம்பியின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்பட்டது.

  • நமது நிருபர்