Fri. Dec 20th, 2024

தண்ணீர் வேண்டி சிறப்பு பூஜை செய்த | வாழும் கலை ரவிசங்கர் குருஜி |

தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டும், அயோத்தியில் நடைபெறும் பிரச்சனை சுமூகமான முறையில் முடிய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்தார் வாழும்கலை குருஜி ரவிசங்கர்….

திருத்தணி- செப்டம்பர்-15.

திருத்தணி, சுப்ரமணியசாமி திருக்கோயிலில் இன்று வாழும்கலை ஸ்ரீ ரவிசங்கர் குருஜி சாமி தரிசனம் செய்தார். மேலும் மூலவர் முருகப் பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த பூஜையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை வாழும் கலை ரவிசங்கர் குருஜி ஏற்பாடு செய்து பூஜையில் பங்கேற்றார். முன்னதாக திருக்கோயிலின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின்பு திருத்தணி அருகே உள்ள தாடூர் பஞ்சாயத்து பகுதியில் ஏரி வரவு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு தண்ணீர் சேமிக்கும் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியினை வாழும் கலை அமைப்பினர் செய்து வருகிறார்கள் இந்த பணியினை ரவிசங்கர் குருஜி ஆய்வு மேற்கொண்டு பணிகள் செய்து வரும் நபர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டார்..

பேட்டி :- வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ரவிசங்கர் குருஜி..

திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஆறுபடை வீடுகளில் இந்த திருக்கோயிலும் ஒன்று. இந்த திருக்கோயில் முருகப் பெருமான் அமர்ந்த அமைதி திருத்தலமாகும். இங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டதற்கு காரணம் அயோத்தியில் நடைபெற்றுவரும் பிரச்சினைகள், வழக்குகள் அனைத்தும் சுமுகமான முறையில் முடிவு பெற வேண்டும். தமிழகத்தில் நல்ல மழை பெய்து மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். தண்ணீர் பிரச்சனை முற்றிலும் நீங்க வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எங்கள் அமைப்பு மூலம் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனால் மழைநீரை சேகரித்து பொதுமக்களுக்கு சுபிட்சம் அடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

தற்போது திருத்தணி அருகில் உள்ள பகுதியிலும் ஏரி வரை கால்வாய் பணியினை ஆய்வு மேற்கொண்டு அறிவியல் ரீதியாக தண்ணீரை சேமிக்கும் முறை இந்த மாவட்டத்தில் ஆட்சியர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்… எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் திருத்தணி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு தண்ணீரை சேமிக்கும் வழிமுறைகளை செய்து வருகிறார்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேட்டி :- திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அவர்களின் திட்டத்தின் குடிமராமத்து பணிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் ஏரி குளங்கள் நிறைந்த பகுதி என்பதால் தற்போது பெய்து வரும் மழை நீரை சேகரித்து தண்ணீர் பிரச்சினை இல்லாத மாவட்டமாக ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அவர்களின் திட்டத்தின்கீழ் 200 சிறு பாசன ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது.
முப்பது மிகப்பெரிய ஏரிகள் உள்ளது 536 ஏரிகளில் தற்போது 60 சதவீத ஏரி பணிகள் தூர்வாரப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. மேலும் நமது மாவட்டத்தில் சிறியது பெரியது என்று 3 ஆயிரத்து 200 ஏரிகள் உள்ளது. இதில் தற்பொழுது 1200 ஏரிகள் திட்டமிடப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. வாழும் கலை அமைப்பினரின் உதவியுடன் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் 140 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது.

இந்த அமைப்பின் மூலமாக அறிவியல் ரீதியாக வரத்துக்கால்வாய் மூலம் மற்றும் ஓடைகள் ஆகியவற்றில் 20 மீட்டர் தொலைவில் 20 அடி ஆழத்தில் 15 மீட்டர் சுற்றளவில் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதனைச்சுற்றி ஜல்லிகள் போடப்பட்டு நீர் சேமிப்பு தொட்டியாக அமைக்கப்பட்டுள்ளது. நல்ல மழை பெய்து வரும் இந்த தண்ணீர் இந்த நேரத்தில் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முழுமையாக மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்க்க வேண்டுமென்று போர்க்கால அடிப்படையில் ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் வரவு கால்வாய்கள் என அனைத்தும் சிறப்பான முறையில் தூர்வாரப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

  • நமது நிருபர்