காவல் ஆணையர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக உள்துறை செயலரிடம் மனு அளித்த அறப்போர் இயக்கத்தினர்.
செப்டம்பர் 07-2019
அறப்போர் இயக்கம் செப் 5ம் தேதி கூடுதல் தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டியை அவர்களை சந்தித்து, சென்னை காவல் ஆணையர் திரு.A.K.விஸ்வநாதன் அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் படி கோரியுள்ளது. தொடர்ந்து அறப்போர் இயக்கத்தினர் மீது பொய் வழக்குகள் போடுவதாலும், அறப்போர் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துபவர்கள் மீது காவல்துறை வைத்து மண்டப உரிமையாளர்களையும் மிரட்டி தடுப்பதற்கும், தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதற்கும் காவல் துறையையும் தனது அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்கிறார் சென்னை காவல் ஆணையர் திரு.A.K.விஸ்வநாதன். அவர்கள் என்றும் குறிப்பிட்ட மனுவை தமிழக காவல்துறை தலைவர் திரு.திரிபாதி அவர்களுக்கும் அனுப்பி உள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்…
கடந்த 20/06/2019 அன்று கேளு சென்னை கேளு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு அறப்போர் இயக்கத்தினர் சென்னை காவல் ஆணையரை சந்தித்த பொழுது உங்களுக்கு அனுமதி தர இயலாது என்றும் அமைச்சர் வேலுமணியின் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்றும் கூறினார். வேண்டுமானால் நீங்கள் அமைச்சர் வேலுமணியை சென்று சந்திக்கவும் என்று சொல்கிறார். அவரை நாங்கள் சந்திக்க முடியாது என்று சொல்லி விட்டு நாங்கள் வந்தது முதல் அறப்போர் இயக்கம் மீது காவல் துறையை பயன்படுத்தி காவல் ஆணையர் தொடர் பொய் வழக்குகளை பதிவு செய்கிறார். கல்லுக்குட்டை ஏரியை பார்வையிட்டதற்காக பொய் வழக்கு, தாமரைக்கேணி ஏரி பகுதியில் செம்மெஞ்சேரி காவல் நிலையம் கட்டுவதை சுட்டி காட்டியதற்காக பொய் வழக்கு, சென்னை மாநகராட்சி ஊழல் குறித்து பேசியதாக பொய் வழக்கு, அறப்போர் விழிப்புணர்வு நிகழ்வை பெரம்பூர் பகுதியின் மண்டப உரிமையாளரை மிரட்டி நிறுத்திவிட்டு அந்த நிகழ்வை நடத்தாமல் ஏமாற்றி விட்டோம் என்று எங்கள் மீது பொய் வழக்கு என்று தொடர் பொய் வழக்குகளை அறப்போர் இயக்கம் மீது காவல்துறை பதிவு செய்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி ஊழல்களை குறித்து பேசி அமைச்சர் வேலுமணியை அவதூறு செய்ததாக அரசுக்கு காவல் ஆணையர் புகார் அனுப்பி அறப்போர் ஒருங்கிணைப்பாளர் மீது குற்றவியல் அவதூறு பொய் வழக்கு தொடுக்கப்படுகிறது. மேலும் சமீபமாக உளவுத்துறை நபர்களை அறப்போர் தன்னார்வலர் வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.. தனது அதிகாரத்தை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்து வருகிறார். காவல் ஆணையர் என்பவர் நேர்மையாக அரசியல் சாசனத்தின் படி நடக்க வேண்டும். அமைச்சர் சொல்படி கேட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஆணையர் தேவை இல்லை எனவே அவரை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய கோரியுள்ளோம் என்று ஊடகத்தினரிடம்
தெரிவித்த அறப்போர் நிர்வாகிகள்…
அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராக வேலை செய்ய கூடாது என்பதற்கே ஆணையரின் இந்த மிரட்டல் அறப்போர் இயக்கம் தொடர்ந்து ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் என்பதை ஊழல்வாதிகளுக்கும் அவர்களின் சார்பில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அறப்போர் இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்…
சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்கள் எதிர்கட்சிகள் உட்பட அனைவரிடமும் சுமூகமாக பழகி வரும் நிலையில் அறப்போர் இயக்கம் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டி உள்துறை செயலரிடம் மனு அளித்துள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆணையர் மீது அறப்போர் வைக்கும் குற்றச்சாட்டு உண்மை என்றால் இந்த செய்தியை வெளியிடும் (பேராண்மை) தளத்தின் மீதும் (பத்திரிகையாளர் ச.விமலேஷ்வரன்) மீதும் காவல் ஆணையரின் துண்டுதலின் பேரில் விரைவில் பொய் வழக்கு பதிவு செய்யப்படலாம்…
இறைவன் அருளால் அந்த வழக்கையும் சந்திப்போம்..
ச.விமலேஷ்வரன்✍