Sun. Oct 6th, 2024

நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் | புறம்போக்கிற்கு துணை போகும் தாசில்தார் |

நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் | புறம்போக்கிற்கு துணை போகும் தாசில்தார் |

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட கீழத்தாணியம் கிராமம், இங்கு 1000க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்வூர் எல்லையில் பாசன கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் வரத்து வழியாக மழைநீர் வந்து சேர்ந்தால் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யலாம் என்றும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் வரத்து வாரியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு உள்ள புறம்போக்கு நிலத்தை குழந்தை பூசாரி மகன் கருப்பையா பூசாரி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி குடியிருந்து வருகிறார். இதனை எதிர்த்த ஊர் மக்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு போடப்பட்டது. இந்த உத்தரவு நகலை பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் அனுப்பப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் புறம்போக்கு நிலைத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனிநபருக்கு ஆதரவாக இன்றுவரை கட்டிடத்தை இடிக்காமலும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் இருந்து வருகிறார்…

நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தும் விதமாக செயல்பட்ட தாசில்தார் பாலகிருஷ்ணன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டம் முழுவதும் தாசில்தாரை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கொடுத்தால் மழைநீர் வரத்து சீராக வந்து பாசன கண்மாயில் வந்து சேரும் என்றும் இதனால் விவசாயம் நன்றாக இருக்கும் குடிநீர் பிரச்சனையும் இருக்காது எனவும் ஆனால் தாசில்தார் திருட்டு மணல் கடத்தும் நபர்களுக்கு ஆதாரமாக செயல்பட்டு கல்லாக்கட்டி வருகிறதாகவும். அமைச்சரின் ஆதரவு உள்ளதால் தான் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டார் என்று ஊர் மக்கள் தாசில்தார் மீது குற்றம்சாட்டுகின்றனர். இந்த விசயத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு