Mon. Oct 7th, 2024

விலை போனதா? | ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை |

ஆகஸ்ட் 22-2019

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம், பத்திரபதிவு அலுவலகங்களில் ரெய்டு, ஆர்.டி.ஒ அலுவலகங்களில் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியவர் கைது. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றவரை சுற்றி வளைத்து பிடித்தனர். என்று தினமும் செய்திகள் வெளியாகும். ஆனால் நகராட்சி அலுவலகங்களில் ரெய்டு என செய்தியும் வராது..! வந்ததும் இல்லை..!! காரணம் இவர்கள் நகராட்சி அலுவலகம் பக்கம் கூட போக மாட்டார்கள்.

அதிக வருமானம் வரும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள தாம்பரம், பல்லாவபுரம், பம்மல், செம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, மறைமலை நகர், காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர் நகராட்சிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தின் அதிகாரிகள் டன் கணக்கில் புகார் ஆதாரங்களுடன் வந்தாலும், பணம் பரிமாற்றம் நடக்கிறது என்று போன்கால் வந்தாலும், ரெய்டு நடத்த மாட்டார்கள்.

இந்த10 நகராட்சிகளில் பணியாற்றும் பொறியாளர்கள், சுகாதாரப் பிரிவு மற்றும் நகரமைப்பு அதிகாரிகள், விஜிலென்ஸ் அதிகாரிகளை நாங்கள் விலைக்கு வாங்கி விட்டோம் எங்களை ஒண்ணும் செய்ய முடியாது என்று சவால் விடுகிறார்கள். ( மக்கள் செய்தி மையம் ) நகராட்சிகளில் நடக்கும் பல கோடி ஊழல்கள், நகரமைப்பு பிரிவில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி, நீர் பிடிப்பு பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ள அப்ரூவல்கள் தொடர்பாகவும் டன் கணக்கில் ஆதாரங்களுடன் இதுவரை 30க்கு மேற்பட்ட புகார்கள் கொடுத்துள்ளது.(மக்கள் செய்தி மையம்) ஆனால் ஒரு புகார் மீது கூட முறையாக, முழுமையாக விசாரணை நடக்கவில்லை நடத்தவும் இல்லை…

அதேபோல் காவல் துறை அதிகாரிகள் பற்றிய ஊழலை ஆதாரங்களுடன் புகார் அளித்ததும் நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கண்துடைப்பிற்காக உடனடியாக ஒரு கடிதம் வருகிறது…

1,Petn.No.12054/2018/POL/CC-HQ-12.12.2018/
2,Pet No.11322/2018/POL/CC-HQ.22.11.2018/
3,Pet.No.12241/2018/POL/CC-HQ.21.12.2018/…

நாம் அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்தும்… கடிதத்துடன் மேலும் குறுந்தகடு மூலமும் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அத்துடன் ஊழல் புகாரில் உள்ள அதிகாரிகளுக்கே, நாம் அனுப்பிய ஊழல் புகாரை அனுப்பி விளக்கம் கேட்கும் போதே அவர்களின் தவறுகளை அவர்கள் மறுபடியும் தடயம் இல்லாமல் அழிக்க உதவி செய்வதே ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகளாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது… ஊழல் தடுப்பு இயக்குனரகத்துக்கு நாம் புகாருடன் அனுப்பும் ஆதாரங்கள் குப்பைக் கூடைக்கு போய்விடும். சில நாட்கள் கழித்து ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் டி.எஸ்.பி, ஆய்வாளர்கள் புகார் கொடுத்தவரை செல்போனில் அழைத்து, உங்கள் புகாருக்கு ஆதாரம் கொடுங்கள் என்பார்கள். நாம் ஊழல் புகாருடன் ஆதாரங்கள் இணைத்துள்ளோம் என்று பதில் சொன்னால், எங்களிடம் புகார் மட்டுமே வந்துள்ளது, ஆதாரங்கள் வரவில்லை என்று பதில் சொல்லுவார்கள்.. நாம் அனுப்பிய ஆதாரங்கள் எங்கே போனது என்று யாரிடம் கேட்பது…

ஊழல் புகாரில் உள்ள அதிகாரிகள் பதவி உயர்வு கிடைத்த கதையை பாருங்கள். ஆவடி நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், அலுவலகத்தில் இலஞ்சம் வாங்கும் போட்டோவே வெளியானது. அத்துடன் 2018ம் ஆண்டு கோட்டூர்புரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக இருந்த விஜயலட்சுமி மீது ஆதாரங்களுடன் புகார் அளித்தும் மேலும் அவரின் மகன், மருமகள் இருவரும் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்கள். விஜயலட்சுமி பணம் பெற்றது உண்மை தான் என்று இப்போது நமக்கு தெளிவாகிறது. யாரிடம் யார் பணம் பெற்றது என்று அதேபோல் நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் மீது ஊழல் தடுப்பு இயக்குனரகத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டது. மக்கள் செய்தி மையம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் – செயலர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் ராஜேந்திரனை CMDA பகுதிகளில் உள்ள நகராட்சிகள் பணியாற்றக் கூடாது என்று நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு கடிதம் அனுப்பினார். இதனால் ஆவடியில் இருந்து திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றப்பட்ட ராஜேந்திரன், பதவி உயர்வில் திருப்பத்தூருக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊழல் புகார் நிலுவையில் இருக்கும் போது ராஜேந்திரனுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது எப்படி?..
தற்போது திருவேற்காடு நகராட்சியில் ராஜேந்திரனுக்காக புதிய பணி இடம் உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரிலிருந்து, திருவேற்காடு நகராட்சிக்கு மாறுதல் செய்யும் கோப்பு அதி வேகமாக நகர்ந்து வருகிறது. ராஜேந்திரன் மீது மக்கள் செய்தி மையம் கொடுத்த ஊழல் புகார் என்னாச்சு.?

நாம் 2018 டிசம்பர் மாதம் அளித்த புகாரில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு.

ச.விமலேஷ்வரன்
பத்திரிகையாளர்

7299898883