Mon. Oct 7th, 2024

நகை திருட்டு வழக்கில் போலி சாமியார்களா | இருவர் கைது | மூவர் தலைமறைவு |

நகை திருட்டு வழக்கில் போலி சாமியார்களா | இருவர் கைது | மூவர் தலைமறைவு |

சென்னை நீலாங்கரை, ஆசிரியர் காலனியில் ஓய்வு பெற்ற அரசு வங்கி அதிகாரி சந்திரபால் பாண்டியன் (65) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் கடந்த 5 ஆண்டுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். பின்னர் மகனின் மறைவுக் குறித்து தெரிந்து கொள்ள குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்று குறி கேட்டுள்ளனர். அப்போது முகவரியை பெற்ற போலி சாமியார்கள் குழுவை சேர்ந்த 5 பேரை கடந்த மாதம் 21ம் தேதி அந்த வீட்டிற்கு அனுப்பி மகன் இறந்ததை கூறி வீட்டின் உள்ளவர்களை நம்ப வைத்து பின்னர் தோஷம் கழிக்க வேண்டும் என கூறியதும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். சாமியார்கள் பூஜை செய்துவிட்டு 4 சவரன் நகை மறைத்து விட்டு மற்றும் 1000 ரூபாயை பெற்றுக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.

பின்னர் வீட்டின் உரிமையாளர் பூஜையில் வைத்த நகை மாயமானதை அறிந்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் நீலாங்கரை, அடையார், போரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 60 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வாகன நம்பரை கண்டறிந்து அரும்பாக்கம் சென்று அதன் உரிமையாளர் ராம்ஜியிடம் விசாரணை நடத்தியதில் காரை ஆறு மாதத்திற்கு முன்பு அண்ணா நகர் சோரூமில் விற்பனை செய்துள்ளார். அவர்கள் வேலூர் காட்பாடியை சேர்ந்த செந்தில் என்பவரிடம் விற்பனை செய்ததாகவும் பிறகு தனிப்படை போலீசார் அவரது உறவினரும் போலி சாமியாரான திருவண்ணாமலையை சேர்ந்த ஜோசப் (67) என்பவரை கைது செய்தனர். ஜோசப் கைது செய்யப்பட்டதை அறிந்த உதயகுமார் (37)… சென்னை அண்ணா சாலை அருகே காரில் தப்பிச் செல்வதை செல்போன் சிக்னல் மூலம் தெரிந்து கொண்ட போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்று காருடன் உதயகுமாரை கைது செய்து அவர்களிடம் இருந்து கார், 4 சவரன் தங்க நகை, 1000 ரூபாய் பணம் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

-நமது நிருபர்