Fri. Dec 20th, 2024

போலி மதுபானங்களை கடத்தியதாக | இருவர் கைது கார் பறிமுதல் |

போலி மதுபானங்களை கடத்தியதாக | இருவர் கைது கார் பறிமுதல் |

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராஜசேகரன், தலைமையில். வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகத்துக்கு இடமாக ஒரு கார், புதுக்கோட்டையை நோக்கி சென்ற போது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் 600 மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது…

இந்த மது பாட்டில்கள் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளவை என்றும் மது பாட்டில்களில் போலி தமிழக அரசு முத்திரை STICKER ஒட்டப்பட்டு இருந்ததும். மேலும் விசாரணையில் ஈடுபட்ட போது அவர்கள் தஞ்சை மாவட்டம் புன்னை நல்லூரை சேர்ந்த பாண்டி (52) மற்றும் நாஞ்சிக் கோட்டையை சேர்ந்த துரை (56) என்றும் தெரியவர போலி மது பாட்டில்களை கடத்தி வந்த இருவரையும் அவர்கள் ஓட்டி வந்த காருடன் மது விலக்கு போலீசார் கைது செய்தனர். பிறகு புதுக்கோட்டையை மாவட்ட மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்…

நமது நிருபர்