Fri. Dec 20th, 2024

கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை கைது செய்த போலீசார்.

ஆகஸ்ட் 08-2019

விருகம்பாக்கம், மேட்டுக்குப்பம் சுடுகாடு அருகே நேற்று மாலை கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்த இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்ததில்… அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததாகவும்… பிறகு விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விருகம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த தேவா என்கிற தேவ குமார் (29), மோனிஷ் (24) என தெரிய வர… இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1கிலோ 200கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா மொத்தமாக வாங்கி வந்து அதை சிறிய பொட்டலங்களாக விருகம்பாக்கம், நெற்குன்றம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

-நமது நிருபர்