கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவர் கைது | ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் |
ஆகஸ்ட் 06-2019
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி ஆய்வு மேற்கொண்ட போது அங்குள்ள பி.கே.காலனியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக… ஆனந்தன்(52) என்பவரை கைது செய்தும், அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
-நமது நிருபர்