Fri. Dec 20th, 2024

புதுக்கோட்டை வீதியில் அரிவாளால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 06-2019

புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரவி என்பவர், கடந்த 4 ஆம் தேதி, புதுக்கோட்டை 3வது கீழ வீதி பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ரவியிடம்… குடி போதையில் அங்கு வந்த அவரது நண்பரான இம்மனாம்பட்டியை சேர்ந்த சுந்தரம், வாய்த் தகராறில் ஈடுபட்டனர். பிறகு தகராறு முற்றிய நிலையில் சுந்தரம் வைத்து இருந்த அரிவாளை எடுத்து ரவியை சராமாரியாக தாக்கினார். இதில் ரவி படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து சுந்தரம் தொடர்ந்து தாக்கியதால் அருகில் உள்ளவர்கள், கற்களை கொண்டு சுந்தரத்தை தாக்கியதில் சுந்தரத்திற்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்‌. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுந்தரம், ரவி இருவரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அடிபட்ட ரவி உயிர் இழந்தார்.

  • ச.விமலேஷ்வரன்