வட மாநில பெண் அடித்துக் கொலை | மூவரை கைது செய்து போலீசார் விசாரணை |
ஆகஸ்ட் 05-2019
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி (30). முதல் கணவர் உத்தம் மண்டேலை பிரிந்து வந்து சென்னை அண்ணா நகரில் கிருஷ்ண பகதூர் (26) என்ற இளைஞருடன் கடந்த 6 மாதமா வசித்தபடி… டாட்டு போடுதல் மற்றும் சேலை விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு வெளியில் சென்று திரும்பிய கிருஷ்ணன் பகதூர், வீட்டின் குளியலறையில் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் யுவராஜ் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு காட்சிகளை பார்த்த போது… இரண்டு நபர்கள், பிங்கியின் வீட்டுக்குள் வந்து சென்றது தெரிய வந்தது. நகைக்காக யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது கிருஷ்ணன் பகதூருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிங்கி கடைசியாக யார் யாருடன் செல்போனில் பேசியுள்ளார் என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
-நமது நிருபர்