Sat. Dec 21st, 2024

கட்டுமான நிறுவன மேலாளரை அடித்து ₹1லட்சம் கேட்ட 6 பேரில் ஒருவர் கைது.

ஜூலை 22-2019

சென்னை, கிண்டி, ஐந்து பர்லாங் ரோட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் மேலாளராக வேலைபார்த்து வருபவர் உமாபதி. இவர் பணியில் இருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் உமாபதியிடம் எங்களுக்கு ரூபாய் ₹1 லட்சம் மாமூல் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர்… “நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும்” என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்தவர்கள் உமாபதியை தன்னுடன் அழைத்துச் சென்று அருகிலுள்ள முட்புதரில் வைத்து அடித்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து இந்த நிறுவனத்தின் மற்றொரு பொது மேலாளர்… கிண்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் கொடுத்த்துள்ளனர். இதனையடுத்து கிண்டி போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்த போது அந்த 6 பேரும் உமாபதியை அங்கேயே விட்டு சென்றுள்ளனர் உமாபதியை மீட்ட போலீசார் தப்பியோடிய 6 பேரில் மேற்கு மாம்பலம் அண்ணாமலைத் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பரை மட்டும் போலீசார் கைது செய்தனர். கிண்டி மடுவின்கரை நரசிங்கபுரத்தை சேர்ந்த ஆனந்த்குமார் உள்பட மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். கைது செய்யப்பட்ட சீனிவாசன மட்டும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார் .

நமது நிருபர்.