மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் அவர்களின்| தாயார் தனம் அம்மாள் அவர்களுக்கு மலரஞ்சலி |
மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் அவர்களின்| தாயார் தனம் அம்மாள் அவர்களுக்கு மலரஞ்சலி |
சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகியுமான மூத்த பத்திரிகையாளர் ஆசான் திரு.வி.அன்பழகன் அவர்களின் தாயார் திருமதி தனம் அம்மாள் அவர்கள் கடந்த 06.07.2019 அன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மறைந்தார் தனம் அம்மாள் அவர்களின் நினைவுகளை கூறும் வகையில், இன்று காலை 11-30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மலரஞ்சலியுடன் கூடிய இரங்கல் கூட்டம் நடைபெற்றது…
இதில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள், மற்றும் நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், உட்பட பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் என சங்கங்களின் பாகுபாடு இன்றி கலந்து கொண்டு. மறைந்த தனம் அம்மாள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்…
இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் அவர்கள் நன்றி கூறினார்…