மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்த | வழக்கில் 4 பேர் கைது |
ஜூலை 18-2019
சென்னை ஒட்டேரியில் உள்ள கிருஷ்ணதாஸ் பணிமனைக்கு செல்லும் வழியில் முரசோலி மாறன் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கடந்த 5ம் தேதி இரவு அன்று பார்க் பகுதியிருந்து போதை ஆசாமிகள் கல்லால் எரிந்ததில் பேருந்து முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. கல்லால் அடித்த போதை ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். பயந்து போன பேருந்து டிரைவர் சதீஷ் (36) இவர் ஐசிஎப் காவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த ஐசிஎப் போலீசார் கண்ணாடியை உடைத்தவர்களை தேடி வந்த போது கேரேஜ் ரயில் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்க சம்பவ இடத்துக்கு சென்ற ஐசிஎப் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை செய்ததில் பெரம்பூர் ராஜீவ் காந்தி நகர் சேர்ந்தவர் ஜெகன் (22), சதிஷ் (19), விஜயகுமார் (20), விக்னேஷ் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கியது தெரிய வந்ததும். அவர்கள் 4-பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
-நமது நிருபர்