கிண்டியில் ஒடிசா வாலிபரை மிதித்து கொலை செய்தவர் கைது…
ஜூலை 17-2019..,
சென்னை கிண்டி பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத்(30), ரபி மோஜி(45), சந்தோஷ்(44), ஜஸ்வந்த் (36) ஆகியோர் தங்கி தனியார் நிறுவனங்களில் செக்கியூரிட்டி வேலை பார்த்து வந்தனர். ஜெகநாத் ராவத் கடந்த 2 தினங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு ரபி மோஜி, சந்தோஷ் ஆகியோர் வந்தபோது ஜெகநாத் ராவத் பேசமுடியாத நிலையில் கிடந்தார். அப்போது அறையில் ஜஸ்வந்த் இல்லாததால் அவருக்கு செல்போனில் அழைத்து கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி தொடர்பை துண்டித்துஉள்ளார் இதுகுறித்து கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர் கிண்டி போலீசார் அங்கு வந்து பார்த்தபோது ஜெகநாத் ராவத் இறந்து கிடந்ததால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ஜெகநாத்ராவத்தை அடித்து தாக்கியதில் எலும்புகள் உடைந்து இறந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கிண்டி போலீசார் இதனை கொலை வழக்காக பதிவு செய்து ரபி மோஜி, சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் இவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கண்டறிந்த போலீசார்… தலைமறைவான
ஜஸ்வந்த்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல விமான நிலையம் வந்த ஜஸ்வந்த்தை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தனர். அப்போது ஜஸ்வந்த் போலீசாரிடம் கூறுகையில், ஜெகன்நாத் ராவத் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு போதையில் என்னிடம் தகராறு செய்வதும், கேலி செய்வதுமாக இருந்ததால் ஆத்திரமடைந்து… போதையில் படுத்திருந்த ஜெகநாத்ராவத்தின் முதுகில் ஏறி மிதித்து விட்டு வெளியே சென்று விட்டேன். பின்னர் வேலைக்கு சென்று திரும்பிய சந்தோஷ், ரோபி மோஜி ஆகியோர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு ஜெகநாத் ராவத் சுயநினைவின்றி கிடக்கிறார் அவரை என்ன செய்தாய் என்று கேட்டனர் நான் மிதித்ததில் தான் ஜெகநாத் ராவத் இறந்துவிட்டதை அறிந்து கொண்ட நான் போலீசாருக்கு பயந்து . சென்னையில் பல இடங்களிலும் சுற்றி திரிந்தேன் பின்னர் சொந்த ஊருக்கே சென்று தப்பிவிடலாம் என முடிவு செய்து விமான நிலையம் வந்தேன். என்று கூறினான்.
-நமது நிருபர்