அரசு வேலை எனக் கூறி | 1.5 கோடி மோசடி செய்தவரை காப்பாற்றிய போலீசார் | அவரை காரில் கடத்திய இருவர் கைது |
ஜூலை 17-2019
சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (28). இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பத்து பேர்களிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றி உள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அன்று கார்த்திகேயன் என்பவர் தனது காரில் அவரது அக்கா ஷாலினியை (30) சென்னை SKYWALK அருகே ரோட்டில் இறக்கிவிட்டு சைதாப்பேட்டை சென்று வருகிறேன் என்று சென்றவர்… காணவில்லை, என்று கார்த்திகேயனின் அக்கா ஷாலினி கடந்த 11ம் தேதி அன்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அமைந்தகரை போலீசார் வழக்குபதிவு செய்ய முடியாது என்றும், அவர் சைதாப்பேட்டையில் காணாமல் போனதால் இங்கே வழக்கு பதிவு செய்ய இயலாது என தெரிவித்ததாகவும். உடனே ஷாலினி அண்ணா நகர் உதவி ஆணையர் குணசேகரன் அவர்களிடம் நடந்ததை கூற… உதவி ஆணையர் உத்தரவின் பேரில் அமைந்தகரை காவல் நிலையத்தில் ஷாலினியிடம் புகரை பெற்று வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்… நேற்று மாலை அண்ணா நகர் பகுதியில் கார்த்திகேயனை காரில் இருந்து இறக்கிவிட வந்த போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. கைது செய்த இருவரையும் அமைந்தகரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி(36), கண்ணன்(42), ஆகிய இருவரும் அவரை காரில் கடத்தியது தெரியவந்தது.
கைது செய்தப்பட்ட இருவரின் வாக்குமூலம் :-
கோபியிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று 10- லட்சம் வாங்கி ஏமாற்றி உள்ளதாகவும், கண்ணனிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி 35 இலட்சம் ஏமாற்றி உள்ளதாகவும். பணத்தை அவரிடம் இருந்து திரும்ப வாங்குவதற்காக கார்த்திகேயனை காரில் கடத்தி மூன்று நாட்களாக காரில் வைத்து இருந்தோம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர். பின்பு இருவர் மீதும் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பத்து பேர்களிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த கார்த்திக்கேயனை காவல்துறையினர் காப்பாற்றியது… அவரால் ஏமாற்றம் அடைந்தவர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்