Sun. Oct 6th, 2024

4 வயது பெண் குழந்தை கொலையா? | பெற்றோர் சந்தேகம் |

ஜூலை 16-2019

திருவள்ளூர் அருகே வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அமீத், அவந்திகா ஆகியோர் ஆண்டர்சன்பேட்டை SKM செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணி புரிந்து வந்த நிலையில்… கடந்த 14 ஆம் தேதி அன்று இவர்களின் 4- வயது பெண் குழந்தை திருவேணி பிற்பகல் 3.30 மணியளவில் இருந்து காணவில்லை.!

மறுநாள் 15ம் தேதி அருகே உள்ள இடத்தில் சடலமாக வெள்ளவேடு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அதன் அறிக்கை வருவதற்குள் குழந்தையை அடக்கம் செய்தது எதற்காக.? குழந்தையின் மரணம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்… இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இந்த வழக்கை முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கூலித் தொழிலாளிகளை அழைத்து வந்த காண்ட்ராக்டர் தொழிலாளர்களை மிரட்டி உள்ளார் என்றும் தெரிவிக்கிறது.

தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்க்கு நேரில் சென்று ஆறுதலும், சட்ட உதவிகளும் செய்ய வெல்ஃபேர் கட்சியின் சார்பில் அதன் மாநில செயலாளர் முஹம்மது கவுஸ் மற்றும், ஜெயநேசன் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அமைப்பாளர், மற்றும் முஹம்மது ஃபாசில் ஆகியோர் காவல் நிலையம் சென்று விசாரித்தனர்.

.

குழந்தையின் மரணம் குறித்து வெல்ஃபேர் கட்சியினர் மாநில மற்றும் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் செய்ய உள்ளதாகவும், குழந்தையின் குடும்பத்தினர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

-நமது நிருபர்