Mon. Jan 6th, 2025

18 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது | இருவர் தலைமறைவு |

ஜூலை 16-2019..

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (38) இவருக்கு முகநூல் மூலமாக பழக்கமான மாதேஷ் என்பவர், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சியான வாவ் காயின் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். அண்ணாநகரில் வசித்து வரும் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோர் ஆன்லைனில் வாவ் காயினில் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த
பத்து ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு ஆயிரம் மடங்காக உயரும் என ஆசை காட்டி தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைனில் 18 லட்ச ரூபாய் பணத்தை மொத்தமாக சீனிவாசலு உள்ளிட்டோர் நடத்தி வரும் நிறுவன வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார் இந்திராணி. ஆறு மாதத்தில் முதலீடு செய்த 18 லட்ச ரூபாய் திரும்ப கிடைக்கும் என கூறிய நிலையில் பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்தப் பணம் கிடைக்கவில்லை. இதன் பின்னர் விசாரித்த போதுதான் இந்திராணியிடம் இருந்து பெற்ற பணத்தை எந்த கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்யாமல் அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக இந்திராணி 2018ல் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது வழக்குப்பதிவு செய்ய வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி தொடர்ந்த வழக்கு பதிவு செய்தார்.
நீதிமன்றம் அண்ணாநகர் போலீசாருக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.. மோசடி தொடர்பான IPC/-420 பிரிவின் கீழ் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மூவரையும் அண்ணாநகர் போலிசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தப்பி செல்ல முயன்ற பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலுவை அடையாளம் கண்ட விமானப்படை அதிகாரிகள் அண்ணாநகர் ஆய்வாளர் முத்துக்குமார் என்பவருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்துக்கு சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…

இந்த வழக்கில் தேடப்படும் மேலும் இரண்டு பேர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் அவர்களை தேடி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்…

-நமது நிருபர்