விபத்தில் பெண் ஆய்வாளர் காயம் போதை ஆசாமி மூவர் கைது |
ஜூலை 17-2019
பெண் காவல் ஆய்வாளர் மீது இருசக்கர வாகனம் மோதியதால் கால் முறிவு |
மதுபோதையில் தாறு மாறாக வாகனத்தை ஓட்டிவந்த மூன்று இளைஞர்கள், பணி முடிந்து வீடு திரும்பிய பெண் ஆய்வாளர் மீது மோதியதில் ஆய்வாளரின் கால் முறிந்து படுகாயமடைந்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மருதம் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி(44), தனது பணி முடிந்து… நேற்று இரவு, கொரட்டூர், சீனிவாசபுரத்தில் தனது வீட்டிற்கு ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இரவு 10.30 மணி அளவில் வடபழனி 100 அடி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிர் திசையில்.. மது அருந்திவிட்டு போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த மூன்று இளைஞர்கள், திடீரென கட்டுப்பாட்டை இழந்து மகாலட்சுமியின் வாகனம் மீது மோதியதில் அவரின் இடது கால் முட்டிக்கு கீழ் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
எதிரில் வந்து விபத்தை ஏற்படுத்தியமூவரும், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார்… பெண் ஆய்வாளரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பி ஓடிய மூவரையும் சில மணி நேரத்தில் பிடித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அரும்பாக்கம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த விஜய்(19), புருஷோத்தமன்(20), மற்றும் நெசப்பாக்கம் கானு நகரைச் சேர்ந்த பிரகாஷ் (21) என தெரியவர அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்..
-நமது நிருபர்
நமது நிருபர்