பட்டா கத்திகளுடன் சுற்றித் திரிந்த 5- ரவுடிகள் கைது |
பட்டா கத்திகளுடன் சுற்றித் திரிந்த 5- ரவுடிகள் கைது |
சென்னை புளியந்தோப்பு பிவி.காலனி பகுதியை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ்வரன் (23), இவர் 2018ல் போலீசை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறை சென்று வந்த பின் ரவுடியாக அந்த பகுதியில் வலம் வந்துள்ளார். கடந்த 2- நாட்களுக்கு முன் புளியந்தோப்பு கங்காரியா தோட்டத்தை சேர்ந்த சந்துரு (23) என்பவரின் பிறந்த நாளை பிவி.காலனி பகுதியில் அவர்களது நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சந்துரு மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பிரகேஷ் (23), சதிஷ்(22), அருண்(22), பிரேம்(21) ஆகியோரை விக்னேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது…
இதனால் விக்னேஷை கொலை செய்ய திட்டம் தீட்டி கத்திகளுடன் இளைஞர்கள் சுற்றி திரிவதாக போலீசாருக்கே கிடைத்த தகவலின் பேரில் பிவி.காலனி பகுதியில் மறைந்து இருந்த பிரகேஷ், சந்துரு, சதிஷ், அருண், பிரேம் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 பட்டா கத்திகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
- நமது நிருபர்