இருசக்கர வாகனம் |செல்போன்களை திருடியவர்கள் கைது |
ஜூலை 14- 2019
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கட்டிட வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று செல்போன் மற்றும் பணத்தை திருடிவிட்டு தப்பியோடிய மூவரை கைது செய்த போலீசார்.
வளசரவாக்கத்தில் உள்ள ஜானகி நகர் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிபவர் பெரியசாமி அவர் வேலை செய்யும் கட்டிடத்திற்குள் சென்ற மதுரவாயல் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற கொசுரு (19), ராமாபுரத்தை சேர்ந்த குமார் என்ற கொக்கி குமார் மற்றும் நெற்குன்றத்தை சேர்ந்த லக்ஷ்மனன் என்ற லச்சு (21) ஆகிய மூவரும்.. அங்கு வேலை செய்பவர்களின் 4 செல்போன்களையும், 450 ரூபாய் பணத்தையும் திருடிவிட்டு தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியசாமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 4- செல்போன் மற்றும் 450- ரூபாய் தவிர… மேலும் 9 செல்போன் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள்
(TN 10 AY 3099 – Dio,
TN 10 AP 4042 – Dio,
TN 01 AE 9473 – Pulsar) கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றவாளி மூன்று பேர் மீதும் ஏற்கனவே பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் வளசரவாக்கம் போலீசார் இவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்…
- நமது நிருபர்