Sun. Oct 6th, 2024

உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் | மேலும் 3 பேர் கைது |

ஜூலை 14-2019

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(23)
இவர் கோயம்பேட்டில் கூலி வேலை செய்து வருகிறார். முருகானந்தம் கடந்த 6ம் தேதி அன்று இரவு 9 மணி அளவில் கோயம்பேடு 7 ஆம் நம்பர் கேட்டின் அருகில் நின்றபடி… தனது தாயாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து வாகனத்தில் வந்த கோயம்பேடு போலீசார் முருகானந்தத்தை அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அதற்கு முருகானந்தம் எதற்காக என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த தலைமை காவலர் சுரேஷ் , முருகானந்தத்தை பிளாஸ்டிக் லத்தியால் (Plastic pipe) சரமாரியாக தாக்கினர். அதில் அடி தாங்க முடியாமல் முருகானந்தம் சத்தம் போடுவே கூலித் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தனர். இதை பார்த்த காவலர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதனால் கொந்தளித்த கூலித் தொழிலாளிகள். 500க்கும் மேற்பட்டவர்களை ஒன்று சேர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டு.. கூலி தொழிலாளியை தாக்கிய காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.

இது தொடர்பாக கூலித் தொழிலாளியை தாக்கிய தலைமைக் காவலர் சுரேஷ் என்பவரை பணி இடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் இது சம்பந்தமாக கோயம்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜீவ் சம்பவ இடத்துக்கு விசாரணை செய்ய வரும்போது அங்கு இருந்த வாலிபர்கள் உதவி ஆய்வாளரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி கையில் இருந்த வாக்கி டாக்கியை பிடிங்கி விரட்டியடித்தனர்.

அதில் காயம்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ராஜீவ் கடந்த 6ம் தேதி இரவு கிழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து. உதவி ஆய்வாளரை தாக்கியவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அரியலூர் சேர்ந்த அரிகரன்(19), திருநாவுக்கரசு(22), சேகர், ராம்குமார்(21), பீமா ராஜ்(24), குணசேகரன்(50), சிற்றரசு(24) ஆகியோரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறைசாலையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வாணியம்பாடி சேர்ந்த விஜய் (25), அரியலூர் சேர்ந்த குமாரவேலு (41), ஆறுமுகம் (28) ஆகியயோரையும் கைது செய்து எழும்பூர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

-நமது நிருபர்