Mon. Jul 8th, 2024

நில பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சார் பதிவாளர் | வீடியோ ஆடியோ ஆதாரம் |

புதுக்கோட்டை அருகே லேணாவிளக்கு பகுதியில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் கேட்டு 4 மாதமாக அலைக்கழிக்கும் பெண் அதிகாரி.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஏனம்பட்டி டிரஸ்ட்டுக்கு சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்து, திருமயம் சார் பதிவாளர் மகாலெட்சுமி ஆவணத்தை திரும்ப கொடுப்பதற்கு பண பேரம் பேசிய வீடியோ மற்றும் ஆடியோ வெளிவந்துள்ளது.

தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை அவர்களின் மற்றொரு அறக்கட்டளைக்கு தனமாக கொடுக்க முடிவு செய்து… வழக்கறிஞர் கண்ணன் மூலமாக எழுதி திருமயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி பதிவு விதிகள்படி தாக்கல் செய்தனர். மொத்தமாக 16 ஏக்கர் நிலம் அரசின் மதிப்புப்படி 11,13,540 ரூபாய் ஆகும். இதற்கான தொகை 39- ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டது. அதன்படி பதிவு முடிந்த உடன் 9-3-2019 அன்று களப்பணி செய்து விட்டு ஆவணத்தை தருவதாக கூறி உள்ளார். பின்னர் வழக்கறிஞர் கண்ணன் தொலைபேசியில் களப்பணிக்கு வருமாறு கூப்பிட்ட போது, தன்னை கவனித்து கொள்ள வேண்டும் என வழக்கறிஞரிடம் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். பின் வழக்கறிஞர் காரிலே இடத்தை ஆய்வு செய்து விட்டு சென்றார். அதைத்தொடர்ந்து ஆவணத்தை திரும்ப தர வேண்டும் என்றால் ஐந்து லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் வரை லஞ்சம் கேட்டு பேரம் பேசியுள்ளதாக தகவல்.

லஞ்சம் கேட்ட வீடியோ ஆதாரம்.

மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் கேமரா இருப்பதால் பேரம் பேச பதிவு வைப்பறைக்குள் அழைத்து சென்று பேசி உள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட அறக்கட்டளை மேலாளர் சரவணனிடம் லஞ்ச பணத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்ட உடன்… ஆவணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்தனர். பதிவு செய்யப்பட்ட ஆவணத்தினை திருப்பிக் கொடுக்க லஞ்சம் கேட்டு… அதற்கு லஞ்சம் கொடுக்காததை மனதில் கொண்டு, கடந்த நான்கு மாதமாக இழுத்தடிப்பு செய்கின்றனர். இதற்கு திருமயம் சார் பதிவாளர் மகாலெட்சுமி, புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் லதா (பொறுப்பு) உமாவதி ஆகியோர் கூட்டு சேர்ந்து… லஞ்சம் கொடுக்காததை மனதில் கொண்டு அலைகழிப்பு செய்து வருகின்றனர்.

போனில் பேசும் ஆடியோ ஆதாரம்.

இதனால், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பதிவு துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மகாலெட்சுமி பேசிய ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் உள்ளதால் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

-நிருபர் பார்த்தசாரதி