2 லட்சம் மதிப்புடைய போதைப்பொருள் கடத்தல் | போலீசார் பறிமுதல் |
ஜூலை 14-2019..,
ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
பெங்களூரில் இருந்து கடத்தி வந்து, சென்னையில் போதைப்பொருட்கள் விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு, ஓட்டேர், செங்கற்சூளை சாலையில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அதிகாலை, அந்த சாலையில் உள்ள மளிகைக் கடையில் சோதனை நடத்தினர். அதில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கின.
சோதனையில் சிக்கிய, எம்.டி.எம்., குட்கா 5,280 பாக்கெட்டுகள், எம்.டி.எம்., கோல்டு 2,480 பாக்கெட்டுகள், சைனி கைனி 1,176 பாக்கெட்டுகள், போலி ஹான்ஸ் 9,480 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ஒரிஜினல் ஹான்ஸ் 4,470 பாக்கெட்டுகள், கூல் லிப் 238 பாக்கெட்டுகள், ரெமோ குட்கா 33,600 பாக்கெட்டுகள், ஸ்வாகத் குட்கா 729 பாக்கெட்டுகள் என, மொத்தம் 1,164 போதைபொருள் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்த விசாரணையில், ஓட்டேரியை சேர்ந்த மாரீஸ்வரன் (30), நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சோலைராஜதுரை (27), விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (23) ஆகியோர் போதைபொருட்களை விற்றதும்… அவற்றை பெங்களூருவில் இருந்து கடத்தி கொண்டுவந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
நமது நிரூபர்