மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடிக் கணவர் மாட்டு சேகர்.
ஜூலை 13-2019
பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடிக் கணவர் தலைமறைவு
ரவுடி வீட்டில் இருந்து 2- பட்டாக் கத்தி மற்றும் கை துப்பாக்கி மூன்று தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர். மேலும் ரவுடியின் கூட்டாளி இருவர் கைது.
சென்னை அண்ணா நகர், Y பிளாக், 2-வது தெருவைச் சேர்ந்தவர் மாட்டு சேகர்(52). பிரபல ரவுடியான இவர் மீது வெடிகுண்டு வீசுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது மனைவி அனுராதா (40) அரசு வக்கீலாக உள்ளார். கடந்த 11 ஆம் தேதி இரவு, அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் அனுராதா புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் மாட்டு சேகர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்திருந்தார். இது குறித்து அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி மாட்டு சேகர் அறையில் துப்பாக்கி மற்றும் கத்திகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து… அவரது வீட்டை சோதனை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் லைசென்ஸ் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள், பட்டா கத்திகள் இரண்டும் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இவற்றை பறிமுதல் செய்த போலீசார், மாட்டு சேகர் எங்கு உள்ளார் என்பது குறித்து… துணை ஆணையர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில் :- மாட்டு சேகர் மீது வெடி குண்டு வீசியது, கொலை வழக்கு என ஒன்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் திருந்தி வாழப்போவதாக கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு எந்தவித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்து வந்ததாகவும், தற்போது அவரது மனைவிக்கு ஏன் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் இவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கைதுப்பாக்கி மற்றும் கத்திகள் எங்கிருந்து வந்தது எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருவதாகவும். இந்த நிலையில் மாட்டு சேகர் எங்கு பதுங்கி உள்ளார்.. என்பது குறித்தும் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்…
-நமது நிருபர்