சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய | மூன்று பெண்கள் கைது | 5-பேர் தலைமறைவு |
ஜூலை 12-2019
16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய விபச்சார கும்பல் கைது.
சென்னை, புளியந்தோப்பு காவல் நிலையத்தில், அதே பகுதியைச் சேர்ந்த பெண், தனது 16 வயது மகளை காணவில்லை என, கடந்த 3 ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுமி வீட்டிற்கு வந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி விபச்சாரக்கும்பலை சேர்ந்த முபினா என்ற பெண்ணிடம்… தான் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாகவும், தனக்கு ஏதேனும் வேலை வாங்கி தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்கு முபினா, அன்று இரவு புளியந்தோப்பு பகுதியில் சிறுமியை தங்க வைத்து, பின் சபினா என்ற பெண்ணுடன் சேர்ந்து பிரபல விபச்சார கும்பல் தலைவன் ரமேஷின் மனைவியான நிஷாவிடம் கொண்டு சென்றுள்ளனர்.
நிஷா அச்சிறுமியை புரசைவாக்கம், முத்து தெருவில் உள்ள ஒரு வீட்டில்… அடைத்து வைத்து 5 பேருடன் பாலியல் உறவில் ஈடுப்படுத்தியுள்ளார். பின் எல்லாம் முடிந்தபின், அச்சிறுமிக்கு ரூ.350 பணத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார்… விசாரணை மேற்கொண்டதில், சமீபத்தில் சென்னை, வேப்பேரியில் போலீசார் ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில் இரவில் சூதாட்ட விடுதியாகவும், பகலில் விபச்சார தொழிலில் ஏழை சிறுமிகள் மற்றும் பெண்களை ஈடுப்படுத்தி வந்ததும், நடத்துவது விபச்சார புரோக்கர் ரமேஷின் மனைவி நிஷா என்பதும் தெரியவந்தது.
ஏழை சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வந்த விபச்சார கும்பலை சேர்ந்த சபினா, முபினா மற்றும் நிஷா ஆகியோரை கைது செய்த புளியந்தோப்பு போலீசார் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். ஏழை சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அந்த நபர்கள் பிண்ணனியில் இருக்கும் கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்…
-நமது நிருபர்