காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் | ஒருவர் கைது |
ஜூலை 11-2019
விழுப்புரம் மாவட்டம் கோட்டாகுப்பம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையின் போது.. நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் TN 03 H 7474 என்ற எண் கொண்ட இன்னோவா கார் ஒன்றை போலீசார் தடுத்து வாகன சோதனையிட்டனர்,
சோதனையின்போது காரில் 1லிட்டர் 80 மில்லி மதிப்பிலான மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வந்துள்ளனர். மொத்தம் 204 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சென்னை அரணி கெங்கன் தெரு பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோபிநாத்/33 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்…
-நிருபர் ராம்