Sun. Oct 6th, 2024

அரசாணை வெளியிட்டு ஓராண்டாகியும் | அடையாள அட்டை வழங்காத ஆவடி மாநகராட்சி |

அரசாணை வெளியிட்டு ஓராண்டாகியும் | அடையாள அட்டை வழங்காத ஆவடி மாநகராட்சி |  

ஜூலை, 8 , 2019

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்பும்,அடையாள அட்டை வழங்கப்படாததால்,அரசு ஊழியர்களுக்கும்,கொலை,கொள்ளை ,வழிப்பறியில்  ஈடுபடுவோருக்கும் வித்தியாசம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு ஊழியர்கள்  அடையாள அட்டை அணிவதை கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டு ஓராண்டை கடந்த நிலையில், பெரும்பாலானோருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. ஆவடி மாநகராட்சியில்,பெரும்பாலான  ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படாத நிலையே இருந்து வருகிறது.

அரசு துறைகளின் கீழ் பணி புரிவோர் என கூறிக்கொண்டு,பெரும்பாலான வீடுகளில், கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்று விடுகின்றனர்.இந்நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர்,ஆவடி காவல் துணை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு,வீடுகளில்,அரசு ஊழியர்கள் எனக் கூறிக் கொண்டு வருபவர்களிடம் பொதுமக்கள் தயங்காமல்,அவர்களது அடையாள அட்டையை வாங்கி பார்க்க வேண்டும்.அவர்களிடம் அடையாள அட்டை இல்லையென்றால்,உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுப்பதால் மட்டுமே,சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார். இதற்கான ஆடியோ ஆதாரம் பேராண்மை நிருபர் குழுவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,துப்புறவு ஊழியர்கள்,மின் ஊழியர்கள் என பொது மக்களிடம் அன்றாடம் தொடர்பில் இருந்து வருபவர்களிடம் மக்கள் நம்பிக்கையிழந்து வரும் சூழல் நிலவுகிறது.

ஆவடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மோகனிடம்,சமூக ஆர்வலர் ஒருவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, இது குறித்து கேட்டதற்கு,நகராட்சி ஊழியர்களுக்கு அடையாள அட்டை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும்,விரைவில், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதற்கான ஆடியோ ஆதாரம் பேராண்மை நிருபர் குழுவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலை,கொள்ளை,வழிப்பறிச் சம்பவங்கள்  பெருகிக் கொண்டு வரும் சூழலில்,அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டைக் கடந்த நிலையில், இன்றளவும் வழங்கப்படவில்லை.குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில்,அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டையை முறையாக வழங்க, அரசு உத்தரவிட வேண்டுமென,அரசு ஊழியர்களும்,பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது நிருபர்