வேலூர் மக்களவைத் தொகுதி | திமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு
வேலூர் மக்களவைத் தொகுதி | திமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு
ஜூலை, 6 , 2019
வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில், திமுக சார்பில், டி.எம்.கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பணப் பட்டுவாடா புகாரின் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரலில்,நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்,கதிர் ஆனந்த், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து,அவரது வீட்டிலும், அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. பின்,இவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டிருந்த நிலையில்,வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்