Sun. Oct 6th, 2024

தொலைநோக்கு பார்வையில் மத்திய பட்ஜெட் | முதல்வர் பழனிசாமி பாராட்டு

தொலைநோக்கு பார்வையில் மத்திய பட்ஜெட் | முதல்வர் பழனிசாமி பாராட்டு

தொலைநோக்கு பார்வையில், நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக,முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை, பாராளுமன்றத்தில், நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து,பரவலாக  பாராட்டுதலுக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது.இந்நிலையில்,தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான புது கொள்கைகளோடும்,சீரிய பல திட்டங்களோடும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்,அதை வரவேற்பதாக கூறியுள்ளார்.

மேலும்,பட்ஜெட் மூலமாக தமிழகத்திற்கான பயன் குறித்து தெரிவித்துள்ள முதல்வர், ‘பாரத் மாலா’ திட்டத்தின்,இரண்டாவது கட்டத்தின் பயன் முழுவதுமாக தமிழகத்திற்கு கிடைக்கப் பெறாத நிலையில்,மூன்றாவது கட்டத்தின் மூலமாக,கிராமப்புற சந்தைப் பகுதிகளுக்கு சாலை வசதி  ஏற்படுத்தி தர இத்திட்டம் பயனளிக்கும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு,மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை வரவேற்பதாகவும், குழுவில், நபர் ஒன்றுக்கு ஒரு லட்சம் கடனுதவி வழங்கப்படும் என அறிவித்திருப்பது, தொழில் செய்வதை ஊக்குவிப்பதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் ,பிசிராந்தையர் பாடிய புறநானூற்றுப் பாடலை பாடி,பட்ஜெட்டை தாக்கல் செய்தது, தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நமது நிருபர்