Sat. Dec 21st, 2024

மானியக் கோரிக்கை மீதான விவாதம் | 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு |

மானியக் கோரிக்கை மீதான விவாதம் | 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு |

ஜூலை, 5 , 2019
பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்,110 விதியின் கீழ், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு, பல கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்,அரசியல் காரணங்களால்,தள்ளிவைக்கப்பட்ட மானியக் கோரிக்கை மீதான விவாதம், சட்டப் பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்று, 110 விதியின் படி,முதல்வர்,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை,கூட்டுறவுத் துறை,வனத்துறை,சுற்றுச்சூழல் ஆகிய துறைகளுக்கு பல திட்டங்களை அறிவித்தார்.

அதன்படி,முதல்வர் அறிவித்த திட்டங்களாவன, அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை, உடனடியாக அரவை செய்திட,தஞ்சாவூரை அடுத்த,பேராவூரணியில்,25 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்படும்.

உணவு தானியக் கிடங்குகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில், 36,000 மெட்ரிக் டன் கொள்ளளவுக் கொண்ட,28 கிடங்குகள்,59.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், தானியக் கிடங்குகளின் மேற்கூரைகளை அகற்றிவிட்டு,துருப்பிடிக்காமல் இருக்க,மேற்கூரை அமைக்கும் பணி 21,65 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். தருமபுரியை அடுத்த பாலக்கோடு பகுதியில்,தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் மூலம்,காய்கறிகள்,புளி,பழங்கள் மற்றும் பூக்கள்,பருப்பு வகைகள் ஆகியவற்றை சேமித்து வைத்திட,1,000 மெட்ரிக் டன் கொள்ளளவி,3.75 கோடி ரூபாய் செலவில்,சூரிய மின் சக்தியுடன் கூடிய குளிர்சாதனக் கிடங்கு,நடப்பாண்டில்  அமைக்கப்படும்.

கூட்டுறவு நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி,வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதிகளுடன் சேவை வழங்கிட,தமிழகம் முழுவதும், 125 கூட்டுறவு சங்க கட்டிடங்கள், ரூபாய் 36.42 கோடி செலவில் நடப்பாண்டில் கட்டப்படும்.கூட்டுறவு நிறுவனங்கள் புதுப்பொலிவுடன் சேவை அளிப்பதற்கு ஏதுவாக,143 கூட்டுறவு நிறுவன கட்டிடங்கள் 24.91 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

வனத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், வன எல்லைகளை துல்லியமாக புவியிடங்காட்டி மூலமாக வரையறை செய்திட மத்திய அரசு அறிவுறித்தியுள்ளதை அடுத்து,இத்திட்டமானது, 50 கோடி மதிப்பீட்டில் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நடப்பாண்டில்,577 கி.மீ. நீளமுள்ள வனச் சாலைகளை மேம்படுத்திட,57.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

நமது நிருபர்