போக்குவரத்து ஆய்வாளரிடம் | வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு |
போக்குவரத்து ஆய்வாளரிடம் | வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு |
சென்னை. ஜூலை, 4 ,2019
சென்னை அமைந்தக்கரை அண்ணா வளைவு சிக்னல் அருகே, நேற்று காலை, அமைந்தக்கரை போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வந்தபோது, அங்கு தலைக்கவசம் அணியாத ஒருவரிடம், தலைக்கவசம் அணியும்படி போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை கூறினார். அதற்கு அந்த நபர், ‘‘நீ யார் என்னை கேட்பதற்கு’’ என்று சொல்லி ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த சம்பவம் குறித்து, அமைந்தக்கரை காவல் துறையினர், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் அமைந்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஜோசப் பிரவீன் என்றும், இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்ததாகவும் தெரிய வந்தது.இவர், பல முறை அப்பகுதியில் உள்ள காவலர்களிடம், அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது
இதனையடுத்து, அவர் மீது தகாத வார்த்தைப் பேசுவது, மிரட்டுவது போன்ற பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
– நமது நிருபர்