Mon. Oct 7th, 2024

பண மோசடி வழக்கில் ஆஜராகாத | பிக்பாஸ் மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் |

ஜூலை 3-2019

தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, மீரா மிதுன், பண மோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால்… சம்மன் அனுப்பிய போலீஸார், கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியின், பிக் பாஸ் நிகழ்ச்சியில், மாடல் அழகியான மீரா மிதுன் பங்கேற்றுள்ளார். இதற்கிடையே, சென்னை தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி என்பவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மீரா மிதுன், தன்னிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த புகார் தொடர்பான விசாரணைக்கு வராமல் மீரா மிதுன் தொடர்ந்து அலைக்கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை போலீசார் கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி, மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால், அவர் அப்போதும் ஆஜராகாத நிலையில், மீரா மிதுன் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கடுமையான மனக் கசப்புக் காரணமாக, மீரா மிதுன், நாமினேசனில் வெளியேற வாய்ப்புள்ளதாக, பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…

நிருபர் கோகுலன்