Mon. Oct 7th, 2024

நார் தொழிற்சாலையில் தீ | பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஏரிந்து நாசம் |

ஜூலை, 2 , 2019

புதுக்கோட்டையை அடுத்த, ஆலங்குடியில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில்…
பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

ஆலங்குடி அருகே உள்ள கரும்பிராயன்கோட்டையில், நெடுவாசலை சேர்ந்த, முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில், நேற்று (2 ஆம் தேதி) மதியம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு குவிக்கப்பட்டிருந்த, தென்னை மட்டைகள் மற்றும் நார்கள் எரிய தொடங்கியது.


இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதியைச் சார்ந்தவர்கள், உடனடியாக ஆலங்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள், தீ மளமளவென பரவி, தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனையடுத்து, புதுக்கோட்டை மற்றும் கீராமங்கலத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில், தொழிற்சாலையில் குவிக்கப்பட்டிருந்த தென்னை நார்கள், மட்டைகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட, ரூபாய் 50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள ஆலங்குடி போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

நிருபர் பார்த்தசாரதி